ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள 161 குழுக்கள்

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள 161 குழுக்கள்
ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள 161 குழுக்கள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் உள்ளிட்ட 161 குழுக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவாக இருக்கும் வாக்குகள் சென்னை ராணி மேரி கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. எனவே வாக்கு எண்ணும் இடத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர், மாவட்ட தேர்தல் ஆதிகாரி கார்த்திகேயன், காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் பேசிய கார்த்திகேயன், பூத்சிலிப் வழங்கும் பணி முடியும் நிலையில் இருப்பதாகவும், வேட்பாளர்கள் நாளை மாலை 5 மணி வ‌ரை மட்டுமே பரப்புரை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். 

அதேபோல், 2,500 காவல்துறை அதிகாரிகள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரை ஆவணங்களின்றி கொண்டு சென்ற 30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com