\
சென்னை மருத்துவமனையில் காலமானார் ராஷ்ட்ரிய ஜனதாதளம் எம்.பி

சென்னை மருத்துவமனையில் காலமானார் ராஷ்ட்ரிய ஜனதாதளம் எம்.பி

சென்னை மருத்துவமனையில் காலமானார் ராஷ்ட்ரிய ஜனதாதளம் எம்.பி
Published on

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் முகமது தஸ்லிமுதின் உயிரிழந்தார்.

74 வயதுடைய அவர் பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மக்களவை தொகுதி உறுப்பினர் ஆவார். கடந்த 26ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மக்களவை கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது முகமது தஸ்லிமுதினுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 22 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முகமது தஸ்லிமுதின் 7 முறை எம்.எல்.ஏவாகவும், 5 முறை எம்பியாகவும், கடந்த காலங்களில் மத்திய உள்துறை இணை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com