ஈஷா சார்பில் நதிகள் இணைப்பு விழிப்புணர்வு பயணம்
ஈஷா சார்பில் நடைபெற்ற நதிகளைக் காக்கும் விழிப்புணர்வு பயணத்தின் துவக்க விழா கோவையில் ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடைபெற்றது.
கோவையில் ஈஷா யோகா மையம் சார்பில் நதிகளை மீட்போம் எனும் விழிப்புணர்வு பேரணியின் துவக்கவிழா நடைபெற்றது. ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பஞ்சாப் மாநில ஆளுநர் வி.பி.சிங் பட்நோர், தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஷேவாக், மிதாலிராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜக்கி வாசுதேவ், நதிகளை இணைக்கும் முயற்சியில், அனைவரும் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் பல அறிவியலாளர்களுடன் இணைந்து, தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழகத்தின் ஒப்பந்தத்துடன் உருவாக்கப்பட்டுள்ள வரைவுத் திட்டத்தை மத்திய அரசிடம் அக்டோபர் 2 ஆம் தேதி அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.