தமிழ்நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை

தமிழ்நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை
தமிழ்நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இரண்டு வாரத்தில் கொரோனா பரவல் 4 மடங்கு அதிகரித்துள்ளது. 13 மாவட்டங்களில் மட்டுமே அதிகரித்துவரும் தொற்று விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 12-ஆம் தேதி கொரோனா தொற்றுடன் 441 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தனர். அப்போது தொற்று உறுதியாவது 0.3 விழுக்காடு என்ற அளவில் இருந்தது. சென்னை, செங்கல்பட்டு உள்பட ஐந்து மாவட்டங்களில் மொத்தம் ஒரு நாளைக்கு 40-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே தொற்று உறுதியாகி வந்தது. இது மேலும் குறைந்து 20ஆம் தேதி வாக்கில், 315 பேர் மட்டுமே தனிமைப்படுத்துதலில் இருந்தனர். தொற்று எண்ணிக்கையும் 30ஆக குறைந்திருந்தது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் 4ஆக குறைந்திருந்தது.

ஆனால், அதற்குப் பின் ஜூன் முதல் தேதியன்று தொற்று உறுதியாவது 0. 8 விழுக்காடும், தனிமைப்படுத்துதலில் 629 பேரும் இருந்தனர். பாதிப்பு 7 மாவட்டங்களாக அதிகரித்தது. தற்போதைய சூழலில் 1,332 பேருக்கு என நான்கு மடங்கு அதிகமானோர் தொற்றுடன் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். தொற்று உறுதியாவதும் 1.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பரவலும் 5 மாவட்டங்களிலிருந்து 13 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com