\
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களுக்கு பெரும் சுமை : டிடிவி.தினகரன்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களுக்கு பெரும் சுமை : டிடிவி.தினகரன்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களுக்கு பெரும் சுமை : டிடிவி.தினகரன்
Published on

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது மிகுந்த கவலை அளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. இவற்றின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக மாறி இருக்கிறது.

இந்த நிலையை உணர்ந்து, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. (1/2)</p>&mdash; TTV Dhinakaran (@TTVDhinakaran) <a href="https://twitter.com/TTVDhinakaran/status/1361242186860269570?ref_src=twsrc%5Etfw">February 15, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com