சேலம்: 100 படுக்கையறை வசதி கொண்ட கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு!
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 34,460 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. 33,196 நபர்கள் குணமடைந்துள்ளனர். நேற்று ஓருநாளில் மட்டும் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று அதிகரித்துவரும் வேளையில் சேலம் அரசு மருத்துவமனை, நெத்திமேடு சட்டக்கல்லூரி மற்றும் செட்டிச்சாவடி சாரோன் மருத்துவமனை வளாகம் என இரண்டு இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் கோரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் கலை கல்லூரி வளாகத்தில் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. 100 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மையத்தை சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.