\
நியாயவிலை கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு

நியாயவிலை கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு

நியாயவிலை கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு
Published on

நியாய விலைக் கடைகளில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ஒரு‌ ரூபாய் 50 காசுகள் உ‌யர்த்தப்பட இருக்கிறது. 

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், வரும் அக்டோபர் ஒன்றாம்‌ தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் 15 ரூபாயிலிருந்து ஒரு ரூபாய் 50 காசு‌ விலை உயர்த்தி‌16 ரூபாய் 50 காசாக விற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்திற்கான மண்ணெண்ணெய் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால் ரேஷன் கடைகளிலும் அதன் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com