பிரபல தொழிலதிபர்
பிரபல தொழிலதிபர் முகநூல்

”அவங்க ரொம்ப மோசம்”.. பிரபல தொழிலதிபர் Vs மனைவி.. இருவரும் மாறிமாறி வைக்கும் குற்றச்சாட்டுகள்!

இது குறித்து பிரபல தொழிலதிபர் பதிவிட்ட பதிவு தற்போது இணையதளத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
Published on

பிரபல மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் ஒருவர், விவாகரத்து பெற போராடி வரும் நிலையில், தனது மனைவியின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தற்போது இணையதளத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ரிப்ளிங் என்ற மென்பொருள நிறுவனத்தின் நிறுவனரான பிரபல தொழிலதிபருமான பிரசன்னா சங்கர் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 23.3.2025) அன்று தனது சமூக வலைதளப்பக்கமான எக்ஸ் தலத்தில் வெளியிட்ட பதிவுதான் தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவின்படி,

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டம் பெற்றவரும், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட கிரிப்டோ சமூக வலைப்பின்னல் 0xPPL.com இன் நிறுவனருமான சங்கர், தனது மனைவியின் திருமணத்திற்கு மாறான உறவு குறித்த உண்மையை கண்டறிந்தநிலையில், மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிடலாம் என்ற முடிவு செய்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘ நான் விவாகரத்து பெற போகிறேன். சென்னை போலீசாரிடமிருந்து தப்பிக்க தமிழ்நாட்டிற்கு வெளியே ஒருபகுதியில் தலைமறைவாகி இருக்கிறேன். இது எனது கதை' என்று தனது முதல் பதிவில் குறிப்பிட்டு தனக்கு நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

விவாகரத்து பெற முடிவெடுத்தேன்

அதில், ’ சென்னையில் பிறந்த நான், 20 வருடங்கள் இங்குதான் இருந்தேன். திருச்சி NIT யில் படித்தேன். அங்குதான் எனது மனைவியை சந்தித்தேன். இந்தியாவில் நான் #1 கோடராக தரவரிசைப்படுத்தப்பட்டேன். மேலும், தொழில்நுட்பம் சார்ந்த ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்காக அமெரிக்கா சென்றேன்.

எனக்கும் திவ்யாவிற்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆனநிலையில், 9 வயதில் ஒரு மகன் இருக்கிறான். சமீபத்தில் அவளுக்கு அனூப் என்ற நபருடன் 6 மாதங்களுக்கும் மேலாக திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரிந்ததும் எங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அனூப்பின் மனைவி, எனது மனைவி அனூப்பிற்கிற்கு அனுப்பிய மெசேஜ்களையும், அனுப்பிற்காக புக் செய்த ஹோட்டல் குறித்தான ஆதாரங்களையும் அனுப்பினார்.

ஆதாயம் பெற அமெரிக்க சென்றார் என் மனைவி!

இதற்கு பிறகுதான் விவாகரத்து பெற முடிவெடுத்தேன். எங்கள் விவாகரத்தின் ஒரு பகுதியாக, நான் அவளுக்கு எத்தனை மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும் என்பதற்கான விதிமுறைகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தோம். ஆனால், அவள் மகிழ்ச்சியடையவில்லை, அதற்கு பதிலாக நான் அவளை அடித்ததாக என் மீது போலியாக போலீஸ் புகார் அளிக்க முடிவு செய்தார். பின்னர், நான் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலியாக புகார் அளித்தார். மேலும், நான் அவரது நிர்வாணப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டேன் என்றும் கூறினார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட சிங்கப்பூர் காவல்துறையினர், என்மீதான குற்றங்கள் ஆதாரமற்றவை என்று கண்டறிந்து, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் என்னை விடுவித்தனர்.

இந்தநிலையில்தான், இந்தியாவில் விவாகரத்துக்கு நான் தாக்கல் செய்தேன். ஆனால், பணம் மூலம் ஆதாயத்தை தேட நினைத்த அவர், அமெரிக்காவில் அமெரிக்காவில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார்.

பின்னர், விவாகரத்து வழக்கில் உதவுவதற்காக திவ்யா என் குழந்தையை அமெரிக்காவிற்கு கடத்தத் தொடங்கினார். நான் அமெரிக்காவில் ஒரு சர்வதேச குழந்தை கடத்தல் வழக்கைத் தாக்கல் செய்தேன். நீதிபதி எனக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து குழந்தையைத் திருப்பித் தரச் சொன்னார்.

9 கோடி 4.3 லட்சம்

திவ்யா சிங்கப்பூரில் சட்டங்களை மீறியதால், எங்கள் சொந்த ஊரான சென்னைக்கு வந்து இங்கேயே குடியேற அவர் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நாங்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம் - நான் திவ்யாவிற்கு மாதம் தோராயமாக 9 கோடி 4.3 லட்சம் செலுத்துவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. எனவே, அவருக்கும் எனது மகனுக்கும் சென்னை செல்ல டிக்கெட் புக் செய்து கொடுத்தேன். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, எங்கள் மகனை சரிபாதி காலம் பராமரிக்க ஒப்புக்கொண்டோம். அது சிறிது காலம் நடந்தது.

பிரபல தொழிலதிபர்
மேட்டூர் டூ கோவை | யானை தந்தம் கடத்தியதாக நான்கு பேர் கைது..!

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, குழந்தையின் பாஸ்போர்ட்டை ஒரு பொதுவான லாக்கரில் வைக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் திவ்யா தப்பித்து சென்றுவிடுவார் என்று நான் பயந்தேன். அவர் அதைப் பின்பற்ற மறுத்துவிட்டார். புரிந்துணர்வு ஒப்பந்தம் செல்லாது என்றும், இன்னும் அதிகம் பணம் தர வேண்டும், விவாகரத்து கோரி மீண்டும் அமெரிக்கா செல்வதாகவும் அவர் கூறத் தொடங்கினாள்.

கவலையடைந்த நான் நீதிமன்றத்திற்குச் சென்று, பாஸ்போர்ட்டை லாக்கரில் வைத்த பிறகுதான் என் குழந்தையைத் திருப்பித் தருவேன் என்று கூறினேன். திவ்யா நீதிமன்றங்களுக்குச் செல்லவில்லை. அதற்கு பதிலாக இரவு 10 மணிக்கு என் ஹோட்டலுக்கு வந்து, என் மகனை 10 நிமிடங்கள் லாபிக்கு அழைத்து மூளை சலவை செய்ய முயன்றதை அதை நான் நிறுத்தினேன்.

இதனையடுத்து, திவ்யா, நான் என் குழந்தையை கடத்த வந்ததாக போலீசுக்கு கால் செய்ய ஆரம்பித்தார். நள்ளிரவில் அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் , கதவை தட்டினர். அதற்கு முன்பாக எனது மகனுடன் நான் அந்த இடத்தை விட்டு தப்பி சென்று விட்டேன்.

நான் உடனடியாக என் தரப்பு நியாயத்தை என் வழக்கறிஞர்களுடன் போலீசாருக்கு அனுப்பி, குழந்தை தானாக முன்வந்து ஒப்படைக்கப்பட்டதை விளக்கினேன். குழந்தை என்னுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது, வீடியோ அழைப்பில் அதைக் காட்டுகிறேன். மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே போலீசார் தலையிடக்கூடாது என தெரிவித்தேன்.

ஆனால், தொடர்ந்து போலீசார் என்னைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் என் அம்மாவின் வீட்டைத் தாக்கி என்னை பற்றி விசாரித்தார்கள். குழந்தையை அழைத்துச் செல்ல உதவிய என் நண்பர் கோகுலை அவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் அவன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்படுவான் என்று கூறினர்.

என் நண்பனுக்கும் தொந்தரவு!

பயந்துபோன கோகுல், இது கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனை என்றும், அவரைத் தனியாக விட்டுவிட வேண்டும் என்றும் போலீசாரிடம் கூறிவிட்டு பெங்களூரு சென்றுவிட்டான். ஆனால், வாரண்ட்டோ, ஆவணங்களோ, உள்ளூர் பெங்களூரு போலீசாருக்கு எந்த தகவலும் இல்லாமலேயே, மஃப்டி உடையில் பெங்களூரு சென்று அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த 3 நாட்களாக அவர் எந்த FIR-ம் இல்லாமல் காவலில் இருக்கிறார். நான் சரணடையவில்லை என்றால் அவர் துன்புறுத்தப்படுவார் என்று எச்சரித்துள்ளனர். அவர்கள் அவரை ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தவில்லை. அதற்கு பதிலாக தினமும் காலையில் அவரை ஸ்டேஷனுக்கு வரவழைத்து இரவு வரை உட்கார வைத்து வீட்டுக்கு அனுப்புகிறார்கள். என் மீது பல குற்றங்கள் சுமத்த காவல்துறையும் என் மனைவியும் விரைவில் ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளனர். எனது சமூக ஊடக ட்வீட்கள் தவறானவை என்று கூறி எனது நண்பர் கோகுலையும் கையெழுத்திடச் சொல்லியுள்ளனர்.

திங்கட்கிழமை, நான் எனக்காக நீதிமன்றத்தில் "துன்புறுத்தல்" தொடர்பாக மனு தாக்கல் செய்து, நீதிமன்ற அமைப்பு மூலம் விஷயங்களை எடுத்துக்கொள்வேன். இதற்கிடையில், எனது முழு குடும்பமும், தமிழக போலீசாரிடமிருந்து தப்பிக்க ஒளிந்து கொண்டு, மாநிலத்திற்கு வெளியே உள்ளது. என்னுடைய செல்போன் இருப்பிடம், கார், UPI, IP எல்லாம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்..

மேலும், தனது மகன் தன்னோடு சந்தோஷமாக இருக்கிறார் என்பது தொடர்பான வீடியோ, புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளநிலையில், 8.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.

இதனிடையே, தனது 9 வயது மகனை கடத்தி வைத்துக்கொண்டு கணவர் மிரட்டுவதாகவும், பாலியல் குற்றவாளியான தனது கணவரிடம் இருந்து மகனை மீட்டுத் தரக் கோரியும் காவல்துறையிடம் முறையிட்டுள்ளதாக அவரது மனைவி திவ்யா வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “என்னுடைய 3 வயது பையனை 3 வாரங்களாக காணவில்லை. நானும் என் பையனும் யுஎஸ் சிட்டிசன், அமெரிக்காவில் தான் இருந்து வந்தோம். அமெரிக்கா இருந்த என்னையும் என் பையனையும் மிரட்டி கட்டாயப்படுத்தி சொத்து விஷயமாக பேச வேண்டும் இந்தியாவுக்கு அழைச்சிட்டு வந்தார் என் கணவர். எனக்கும் என் கணவருக்கு மேட்ரிமோனியல் பிரச்சனை போயிட்டு இருக்கு. இதுக்கு நடுவுல என்னோட கணவரின் பிஏ என்று கோகுல கிருஷ்ணன் என்பவர் வலுக்கட்டாயமாக என் பையனை என்னிடை இருந்து கூட்டிட்டு போயிட்டார். அவர் உண்மையிலே என் பையனை கூட்டிட்டு போயி கணவர் கிட்ட விட்டாரா அல்லது எங்க கொண்டு போனார் என தெரியாமல் தவிச்சிட்டு இருக்கேன். இதனால், காவல்துறையை அணுகி என் பையனை கண்டுபிடிச்சு கொடுக்க வேண்டும் என கேட்டு இருக்கேன். என்னோட கணவர் எப்படினா எங்களோட மேட்ரிமோனியல் சொத்துக்கள் அனைத்தையும் திருட்டுத்தனமாக இந்தியாவுக்கு டிரான்ஃபர் பண்ணி பல மில்லியன் டாலர்கள் மோசடி செஞ்சிருக்கார். அந்த பணத்த அவங்க அப்பா தாய்லாந்துக்கு வரி கட்டாம மாற்றினார். இந்த வரி முறைகேடுகள் பற்றியெல்லாம் யுஎஸ் போலீசில் புகார் செய்யக்கூடாது என கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.

என கணவர் கேரக்டர் பொறுத்தவரை அவர் ஒரு செக்ஸ் பித்தர். பாத்ரூம், பெட்ரூம்களில் மறைமுகமாக கேமரா வைத்து பெண்களை அழைத்து வந்து வீடியோ எடுப்பது போன்ற வேலைகளை பார்த்தார். அந்த மாதிரி கொடுமைக்கு நானும் ஆளாகி இருக்கேன். இதெல்லாம் சிங்கப்பூர் போலீஸ் கண்டுபிடிச்சு அவரை கைது பண்ணி தண்டனை கொடுத்தாங்க. தன் கிட்ட நிறைய காசு இருப்பதனால் என்னை என்னவேண்டுமென்றாலும் செஞ்சுடலாம்னு நெனக்கக் கூடாது. எனக்கு நியாயம் வேண்டும். அவர் மட்டுமல்லா அவரது தந்தையும் அப்படித்தான். செக்ஸ் தொடர்புகள் அதிகம் வச்சி அவங்க மனைவியை கொடுமைபடுத்தி வெளியே அனுப்பிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com