எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை சொல்லி ஓட்டு கேட்காத வரை எந்த பிரச்சினையும் இல்லை: பாண்டியராஜன்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை சொல்லி ஓட்டு கேட்காத வரை எந்த பிரச்சினையும் இல்லை: பாண்டியராஜன்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை சொல்லி ஓட்டு கேட்காத வரை எந்த பிரச்சினையும் இல்லை: பாண்டியராஜன்
Published on

எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் உரிமை எங்களுக்கு தான் உள்ளது என்று அமைச்சர் பாண்டியராஜன் பேட்டியளித்துள்ளார்.

சென்னை திருவேற்காடு நகராட்சியில் ரூ. 97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகராட்சி கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு தினங்களுக்கு முன்பு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று ஆய்வு செய்தார். மேலும் நகராட்சிக்கு குப்பைகளை அள்ளும் பேட்டரி வாகனங்கள் மற்றும் இரண்டு பூங்காக்களை திறந்து வைத்தார்.

பின்னர், அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், “தமிழ் வளர்ச்சியை பொருத்தவரை தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து அதிமுக அரசு ஏராளமான விஷயங்களை செய்து வருகிறோம். மத்திய அரசு உதவியை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியது திமுக ஆட்சிக்கு பொருந்தும், அதிமுக ஆட்சிக்கு பொருந்தாது. வரும் தேர்தலில் சாதனைகளின் அடிப்படையில் வாக்குகள் கேட்கப் போகிறோம் என்றவர் தொடர்ந்து.

நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டால் கொரோனாவின் இரண்டாவது அலை வருவதற்கு வாய்ப்பில்லை நாம் மெத்தனமாக இருந்தால் அக்டோபரில் கொரோனாவின் இரண்டாவது அலை வருவதை யாராலும் தடுக்க முடியாது. கொரோனாவை விரட்டி அடிக்கும் பணியில் தமிழகம் முன்னணியில் உள்ளது” என்றார்.

எம்ஜிஆர் தோற்றத்தில் நடிகர் விஜய்க்கு ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து கேட்டபோது, அது ரசிகர்களின் விருப்பம் அதற்கு நான் கருத்து சொல்ல முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போல் அவர் இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அது வரவேற்க தகுந்த விஷயம் என கருதுகிறேன்.

ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை சொல்லி அவர்கள் ஓட்டு கேட்டு போகாத வரை எந்த பிரச்சினையும் இல்லை, அவர்களின் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் உரிமை எங்களுக்கு தான் உள்ளது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com