அனைவரும் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்றே இறுதி (18.05.2023) நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம்pt web

அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை, 25 சதவிகித ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், இந்த திட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. இதற்கு, rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைய இருப்பதால், இதை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தேர்வு செய்யப்பட்ட குழந்தையின் பெயர், பட்டியல் விண்ணப்பத்துடன் 24ஆம் தேதி அன்று இணையதளத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பள்ளிகளிலும் வெளியிடப்படும். இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை மே மாதம் 29ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com