\
கண்ணாடி வழியே ஜெயலலிதாவை பார்த்தார் ஆளுநர்: ரிச்சர்ட் பீலே

கண்ணாடி வழியே ஜெயலலிதாவை பார்த்தார் ஆளுநர்: ரிச்சர்ட் பீலே

கண்ணாடி வழியே ஜெயலலிதாவை பார்த்தார் ஆளுநர்: ரிச்சர்ட் பீலே
Published on

ஜெயலலிதா அனுமதிக்கபட்டிருந்த அறைக்கு வெளியில் நின்று கண்ணாடி வழியே ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்தார் என்று லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தார் என்று தெரிவித்தார். ஜெயலலிதா அனுமதிக்கபட்டிருந்த அறைக்கு வெளியில் இருந்து அவரை ஆளுநர் கண்ணாடி வழியாக பார்த்தார் என்றும், அவரிடம் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் மருத்துவமனைக்கு வருகை தந்தவர்கள் பற்றி துண்டுச்சீட்டில் எழுதி ஜெயலலிதாவிடம் காண்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com