தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு; கிலோ ஒன்றுக்கு ரூபாய் 5 அதிகரிப்பு

நெல் விலை அதிகரிப்பு மற்றும் விவசாயிகளுக்கு லாபம் இல்லாததால் அரிசி விலை உயர்ந்ததாக தகவல்.

தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு ரூபாய் 5 உயர்வு. நெல் விலை அதிகரிப்பு மற்றும் விவசாயிகளுக்கு லாபம் இல்லாததால் அரிசி விலை உயர்ந்ததாக தகவல்.

இதுகுறித்து அரிசி கொள்முதல் உரிமையாளர்கள் கூறும்பொழுது கடந்த காலத்தில் ஜிஎஸ்டி வரி இல்லாத பொழுது ஒரு மூட்டைக்கு 25 கிலோ கொடுத்துக் கொண்டிருந்தோம். 900திலிருந்து ஆயிரம் ரூபாய் கிடைத்தது. ஆனால், இப்பொழுதும் GST வரிவிதிப்பால் 26 கிலோ அரிசி மூட்டை ரூபாய் 200 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டு திருவள்ளுவர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திராவில் அதிக அளவு நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதிக அளவு நெல் சாகுபடி செய்தாலும் மகசூல் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் ஒரு ஏக்கருக்கு 30 முதல் 35 மூட்டை வரை நெல் அறுவடை செய்யப்படும். ஆனால் நிஜாம் புயல் வெள்ளம் போன்ற காரணங்களால் மகசூல் குறைவாக உள்ளாது. இதனால் ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 நெல்மூட்டைகள் அறுவடை செய்வதாலும் இதனால் நெல் விலை தற்போது ஏற்றம் கண்டுள்ளது” என்று கூறுகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com