10-ம் வகுப்பு: மறுகூட்டலுக்கு இன்று விண்ணப்பிக்கலாம்

10-ம் வகுப்பு: மறுகூட்டலுக்கு இன்று விண்ணப்பிக்கலாம்

10-ம் வகுப்பு: மறுகூட்டலுக்கு இன்று விண்ணப்பிக்கலாம்
Published on

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று காலை 10மணிக்கு வெளியிடப்பட்டது. மறுகூட்டலுக்கு 19-ம் தேதி முதல் 22-ம் தேதி மாலை 5.45 வரை விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலத்துக்கு தலா ரூ.305, மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 25-ம் தேதி முதல் இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையங்கள் வாயிலாக காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com