ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பான நீதிமன்ற உத்தரவை சமூக வலைதளத்தில் விமர்சித்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெருங்களத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுபாஷ் சந்திரபோஸ். இவர் ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சித்து சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இதையடுத்து போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை விமர்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே நீதிபதிகள் எச்சரித்திருந்த நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.