கல்விகற்க வயது ஒரு தடையில்லை - 61 வயதில் நீட் தேர்வை வென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்

கல்விகற்க வயது ஒரு தடையில்லை - 61 வயதில் நீட் தேர்வை வென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்
கல்விகற்க வயது ஒரு தடையில்லை - 61 வயதில் நீட் தேர்வை வென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்

ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் நீட் தேர்வு எழுதி, அதில் வெற்றியும் பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இடம்பிடித்து உள்ளார்.

'கல்வி கற்பதற்கு வயது ஒன்றும் தடையில்லை' என்பதை நிரூபித்திருக்கிறார் சிவபிரகாசம். 61வயதான அவர், ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். தருமபுரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவபிரகாசம், நீட் தேர்வில் வென்று மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்காக ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரிக்கு வருகை புரிந்துள்ளார். சிவபிரகாசம் அரசுப் பள்ளியில் படித்தவர் என்பதால் 7.5% இட ஒதுக்கீட்டிற்கான தரவரிசையில் 249ஆவது இடம்பிடித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், ''மருத்துவராக வேண்டும் என்பது என சிறுவயது ஆசை. வயது உச்சவரம்பு இல்லாததால் நீட் தேர்வு எழுதினேன். வெற்றியும் பெற்றிருக்கிறேன். நீண்ட காலம் மருத்துவ சேவையாற்ற இயலாது என்பதால் எனது மகன் எதிர்க்கிறார். எனக்கான வாய்ப்பை மற்றொரு மாணவருக்கு விட்டுக்கொடுப்பதுபற்றி யோசித்து வருகிறேன்'' என்றார். ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவபிரகாசத்தின் மாணவர் ஒருவர் தரவரிசையில் 5ஆவது இடம்பிடித்து தற்போதைய கலந்தாய்வில் பங்கேற்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com