கடலில் இழுத்துச் செல்லப்பட்ட முன்னாள் எஸ்.ஐ.. நடைபயிற்சி மேற்கொண்டபோது நேர்ந்த துயரம்!

கடலில் இழுத்துச் செல்லப்பட்ட முன்னாள் எஸ்.ஐ.. நடைபயிற்சி மேற்கொண்டபோது நேர்ந்த துயரம்!

கடலில் இழுத்துச் செல்லப்பட்ட முன்னாள் எஸ்.ஐ.. நடைபயிற்சி மேற்கொண்டபோது நேர்ந்த துயரம்!
Published on

புதுச்சேரி பனித்திட்டு கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளர் கடலில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட பனித்திட்டு கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் (62). இவர் புதுச்சேரி காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இவருக்கு சத்தியபாமா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை பாண்டுரங்கன் பனித்திட்டு கடற்கரை பகுதியில் புயலினால் கடலில் ஏற்பட்டுள்ள சீற்றத்தை பார்த்தபடி நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது முகத்துவராம் பகுதியில் கால் தவறி விழுந்து நீரோட்டத்தால் அவர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் இது தொடர்பாக கிருமாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் அங்குவந்த போலீசார் சற்று தொலைவில் கரை ஒதுங்கிய பாண்டுரங்கனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒய்வுபெற்ற உதவி ஆய்வாளர் நடைபயிற்சியின்போது கடலில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுதி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com