மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா - “தண்டனை கடுமையானால் குற்றம் குறையும்” - ஓய்வுபெற்ற காவல் அதிகாரி

தண்டனைகள் கடுமையாகும்போது குற்றங்கள் நிச்சயம் குறையும் என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. கள்ளச்சாராயம் விற்றால் கடுமையான தண்டனை கொடுப்பதற்கான சட்ட மசோதா, விஷச்சாராய மரணங்களை தடுக்கும் என்றும் இவர் கூறுகிறார்.
காவல் அதிகாரி ராஜாராம்
காவல் அதிகாரி ராஜாராம்pt web

"தமிழ்நாட்டில் இதுவரை இருந்த மதுவிலக்கு சட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்களுக்கு குறைவான தண்டனையே கிடைக்கும் வகையில் இருந்தது" என்று கூறும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராஜாராம், இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமசோதா அந்த குறையை போக்கும் வகையில் இருப்பதாக கூறுகிறார்.

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராஜாராம் கூறுகையில், “தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவோர், ‘அபராதம் கட்டிவிட்டு வந்துவிடலாம்’ என்பதுபோல்தான் இதுவரை இருந்தது. விஷச்சாராய பிரிவு மட்டும்தான், ஜாமீனில் வெளிவர முடியாதது. மகாராஷ்ட்ர மாநிலத்தில் கள்ளச்சாராய சாவுகள் அதிகளவில் இருந்தது. அங்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட பின் சாராய சாவுகள் நிகழவில்லை. சட்டங்களை கடுமையாக்கினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்” என தெரிவித்தார்.

காவல் அதிகாரி ராஜாராம்
மதுவிலக்கு திருத்தச்சட்ட மசோதா சொல்வது என்ன? முழு விவரம்

தற்போது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட முன்வடிவு, கடுமையான தண்டனைகளைக் கொண்டது என்பதால் அதற்கான பலன் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்பது ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் கருத்தாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com