ஓய்வு பெற்ற காவல்துறை டிஐஜி ஜான் நிக்கல்சன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

ஓய்வு பெற்ற காவல்துறை டிஐஜி ஜான் நிக்கல்சன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
ஓய்வு பெற்ற காவல்துறை டிஐஜி ஜான் நிக்கல்சன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

ஓய்வு பெற்ற காவல்துறை டிஐஜி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சென்னையில் உயிரிழந்தார்.

தமிழக காவல்நுறையில் டிஐஜியாக பணியாற்றி ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான ஜான் நிக்கல்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த 26 ஆம் தேதி அவரின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி ஜான் நிக்கல்சன் உயிரிழந்தார்.

யார் இவர்?

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் நிக்கல்சன் தமிழக காவல்துறையில் 1979 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் 1987ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வு எழுதி டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி, சேலம் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய அவர் மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு எஸ்பியாக இருந்த போது டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். திண்டுக்கல் சரக டிஐஜி, சிபிசிஐடி, ஆகிய பொறுப்புகளை கவனித்து வந்த ஜான் நிக்கல்சன் கடந்த 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

தமிழ்நாடு வாள் சண்டை சங்க தலைவராக இருந்த ஜான், கடந்த 2015ஆம் ஆண்டு "நமக்கு நாமே திட்ட" நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக போட்டியிட விருப்பமனு வழங்கினார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவிற்காக தீவிர தேர்தல் பரப்புரையில் ஜான் நிக்கல்சன் ஈடுபட்ட அவர் அதன்பிறகு தீவிரமாக கட்சி பணியில் ஈடுபட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஓய்வு பெறுவதற்கு சிறிது காலம் முன்பு ஐஜியாக தனக்கு பதவி அந்தஸ்து வழங்கக்கோரி ஜான் நிக்கல்சன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com