“வங்கிக் கணக்கில் 1,76,000 கோடி ரொக்கம்” - வேட்புமனுவில் பெரம்பூர் வேட்பாளர் ஒப்புதல்

“வங்கிக் கணக்கில் 1,76,000 கோடி ரொக்கம்” - வேட்புமனுவில் பெரம்பூர் வேட்பாளர் ஒப்புதல்
“வங்கிக் கணக்கில் 1,76,000 கோடி ரொக்கம்” - வேட்புமனுவில் பெரம்பூர் வேட்பாளர் ஒப்புதல்

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் இருப்பதாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பெரம்பூர் தொகுதியில் ஜே. மோகன்ராஜ் என்ற வேட்பாளர் தான் ‘ஜெபமணி ஜனதா’ என்ற கட்சியின் சார்பில் போட்டியிடுவதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அதில், தன் மனைவியிடம் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், இரண்டு லட்சத்து 50‌ ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 13 சவரன் ‌நகையும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் சவுத் இந்தியன் வங்கியில் 3 லட்ச ரூபாய் கடன் இருப்பதாகக் மோகன்ராஜ் கூறியுள்ளார். 

அதுமட்டுமின்றி உலக வங்கியிடம் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் பாக்கி இருப்பதாகவும் த‌னது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். மேலும் தன் கைவசம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் இருப்பதாக எழுத்திலும், 176 கோடி ரூபாய் இருப்பதாக எண்ணிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரது வேட்புமனுவும் ஏற்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இது வேட்புமனு பரிசீலனை நடைமுறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து புதிய தலைமுறையிடம் பேசிய மோகன்ராஜ், “சிவில் நீதிமன்றத்தில் தான் வழக்கு ‌தொடர முடியும். 2016ஆம் ஆண்டிலு‌ம் இதையே தான் வேட்புமனுவில் குறிப்பிட்டே‌ன். மேம்போக்கான அரசியல் நடத்தக் கூடாது. தவறை கண்டிக்கும் தைரியம் யாருக்கும் இல்லை. என் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது. 100 வருடம் சிறை தண்டனை‌ கொடுத்தாலும் ‌ஏற்க தயார். தெரிந்தே குறிப்பி‌ட்டேன் என்பதை ஒப்புக்கொள்வேன்” என்று கூறினார். மோகன்ராஜ் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com