தமிழ்நாடு
கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக் கடைகள் இன்று மட்டும் செயல்பட அனுமதி!
கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக் கடைகள் இன்று மட்டும் செயல்பட அனுமதி!
கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக் கடைகள் இன்று மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
கோயம்பேடு மார்க்கெட் அருகே சிறு வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கோயம்பேடு வணிக நிர்வாக முதன்மை இயக்குநர் கோவிந்த் ராஜ், சிறு குறு மற்றும் சில்லறை வியாபார சங்க பிரதிநிதிகள், சி.எம்.டி.ஏ நிர்வாக செயலாளர் கார்த்திகேயன் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், இன்று மட்டும் வியாபாரம் செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதால், போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது. நாளை மறுநாள் அரசு உயர் அதிகாரிகளுடன் வியாபாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.