அதிமுக கூட்டத்தில் பறந்த தவெக கொடி.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சொன்ன பதில்..
விஜய்க்காக பழனிசாமி குரல் கொடுத்ததால், டிவிகே தொண்டர்கள் தன்னெழுச்சியாகக் அதிமுக கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாங்குடி பகுதியில் புதிதாக கட்டமைக்கப்பட்ட நியாய விலை கடை மற்றும் அங்கன்வாடி மையத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக தொண்டர்கள் அடுத்த கட்சி கொடியைத் தூக்கும் அளவிற்குத் தரம் தாழ்ந்து போகமாட்டார்கள் என்று தெரிவித்தார். அவர் கூறுகையில், "விஜய்க்காக குரல் கொடுத்தது எடப்பாடி பழனிசாமி; வேறு எந்த அரசியல் கட்சித்தலைவரும் எங்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை என்று கொடிபிடித்த தவெக தொண்டர்கள் கூறுகிறார்கள். அதிமுகவின் தொண்டர்கள் யாரவாது அடுத்த கட்சியின் கொடியை தூக்கியதாக வரலாறு உள்ளதா? கூட்டணி சேர்ந்தால் தோள் கொடுப்போம், தோலில் தூக்கி கொண்டாடுவோம். எங்களை எதிர்த்தால் கீழே போட்டு மிதித்துவிட்டும் செல்வோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், விசிக ஒரு வன்முறை இயக்கத்துடன் சேர்ந்துவிட்டது என்றும், அதன் தலைவர் திருமாவளவன் தனது கட்சித் தொண்டர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். விஜயின் ஆதரவு கிடைக்காததால்தான் டிடிவி தினகரன் அதிமுகவைக் குறை கூறுகிறார் என்றும் செல்லூர் ராஜு விமர்சித்தார்.
செல்லூர் ராஜுவின் செய்தியாளர் சந்திப்பு கீழே...