"பாமக சமூகநீதிப் பேரவை தலைவராக பாலு தொடர்வார்” - ராமதாஸுக்கு போட்டியாக அன்புமணி போட்ட தீர்மானம்!
பாமக வழக்கறிஞர் பாலுவை நேற்றைய தினம் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் பதவியில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் நீக்கம் செய்தார்.
இந்நிலையில் இன்று பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் அன்புமணி தலைமையில் பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
சமூகநீதிப் பேரவை தலைவராக பாலு தொடர்வார் என தீர்மானம்..
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி மோதல் நீடித்து வரும் நிலையில் அவர் நீக்கி வரும் நபர்களை அன்புமணி அப்பதவியிலேயே தொடர்வார் என அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் பாமக வழக்கறிஞர் பாலுவை சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தலைவராகவும், செயலாளராக சரவணனையும் மற்றும் மாநில நிர்வாகியாக தொடர்வார் என்ற தீர்மனத்தை சிறப்பு செயற்குழு நிறைவேற்றி இருக்கிறது. புரவலராக அன்புமணி ராமதாஸ் வழிநடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வழிநடத்த இருக்கிறார்.
மேலும் பேரவையின் நிறுவனராக மருத்துவர் அய்யா அவரும் செயல்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.