\
வேதா இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு

வேதா இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு

வேதா இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு
Published on

முன்னாள் முதல‌மைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த, வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றும் முடி‌‌‌வை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ‌ஜெயலலிதாவின் வீட்டை, அரசு நினைவிடமாக மாற்றுவது தவறான முன்னுதார‌ணமாக ஆகிவிடும் ‌என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது‌.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com