\
செம்பரம்பாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு

செம்பரம்பாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு

செம்பரம்பாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு
Published on

செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்பிடிப்பு பகுதிகளில் திருமழிசை பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் நாள்தோறும் 5 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை முறையாக அப்புறப்படுத்தாத பேரூராட்சி நிர்வாகம், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் பங்காரு கால்வாய் அருகே குப்பைகளை கொட்டி சேகரிப்பதாக மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வருந்தும் மக்கள், குப்பை கொட்டும் இடத்தை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com