\
வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்: வடிகால் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்: வடிகால் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்: வடிகால் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி
Published on

நாமக்கல் அருகே கனமழை பெய்து வருவதால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. அதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் என்று அப்பகுதி வாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 3 நாட்களாகவே மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளநீர் சாலைகளில் அதிகரித்து ஓடுகிறது. முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் புதுசத்திரம் சுற்றுவட்டார ‌பகுதிகளில் பெய்த கனமழையால் அம்மன் நகர், நீலாம்பாள் கார்டன் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 200க்கும் அதிகமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இந்நிலையில் புதுசத்திரம், கல்யாணி, அம்மாபாளையம் புதூர், நாட்டாமங்கலம், கன்னூர்பட்டி, கோவிந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக விளைநிலங்கள் உள்ளன. இந்த விளைநிலங்களும் மழைநீரில் மூழ்கின. நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் மழைநீர், ஓடைகளுக்கு புக முடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்துவிட்டதாக அந்த பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com