\
உக்ரைனில் சிக்கி தவிக்கும் குன்னூர் மாணவி - மீட்கக் கோரி பெற்றோர் கண்ணீர்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் குன்னூர் மாணவி - மீட்கக் கோரி பெற்றோர் கண்ணீர்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் குன்னூர் மாணவி - மீட்கக் கோரி பெற்றோர் கண்ணீர்
Published on

உக்ரைனில் சிக்கியுள்ள குன்னூரைச் சேர்ந்த மாணவியை மீட்கக் கோரி அவரது பெற்றோர் கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உக்ரைனில் போர் சூழல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால் அங்குள்ள இந்திய மாணவிகள் தாய்நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களில் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சாய் ஷோனு என்ற மருத்துவ மாணவியும் ஒருவர்.

இவர் உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில், அங்கு போதிய உணவு, குடிநீர் இல்லாமல் தங்கள் மகள் உட்பட ஆயிரக்கணக்கான இந்திய மாணவிகள் சிக்கித் தவித்து வருவதாகவும், அவர்களை உடனடியாக மீட்டு அழைத்து வரக் கோரியும் சாய் ஷோனுவின் பெற்றோர் கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com