\
தமிழக மீனவர்கள் கைது: விடுவிக்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை

தமிழக மீனவர்கள் கைது: விடுவிக்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை

தமிழக மீனவர்கள் கைது: விடுவிக்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை
Published on

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 55 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 55மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் 8 விசைப் படகுகளையும் மீட்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com