தமிழ்நாடு
சேதமடைந்துள்ள கண்காணிப்பு கோபுரத்தை அகற்ற கோரிக்கை
சேதமடைந்துள்ள கண்காணிப்பு கோபுரத்தை அகற்ற கோரிக்கை
தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து கொடைக்கானல் செல்லும் மலைச்சாலை சேதமடைந்துள்ள கண்காணிப்பு கோபுரத்தை அகற்ற சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டம்டம் பறை என்ற இடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மஞ்சளார் அணை மற்றும் தலையாறு நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்கின்றனர். அதற்கு செல்லும் வழியில் வனத்துறையால் கட்டப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம் உள்ளது. அதன் அடிப்பாகம் சேதமடைந்ததால், வனத்துறையினர் தற்போது அதனை பயன்படுத்துவது இல்லை. ஆபத்தான நிலையிலுள்ள கண்காணிப்பு கோபுரத்தை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு தடுப்பு வேலி அமைத்து கண்காணிக்கவும் சுற்றுலா பயணிகள் வனத்துறைக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

