கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து

கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து

கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
Published on

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடியரசுத் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை.

தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், குடியரசுத் தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதும் நடத்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதி கிராம சபைக்கூட்டங்களை நடத்த வேண்டாம் எனவும், அனைத்து ஊராட்சிகளுக்கும் முறைப்படி தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com