\
மெரினாவில் குடியரசுதின அலங்கார ஊர்திகளை கண்டுகளிக்க மேலும் ஒரு வாய்ப்பு

மெரினாவில் குடியரசுதின அலங்கார ஊர்திகளை கண்டுகளிக்க மேலும் ஒரு வாய்ப்பு

மெரினாவில் குடியரசுதின அலங்கார ஊர்திகளை கண்டுகளிக்க மேலும் ஒரு வாய்ப்பு
Published on

சென்னை கடற்கரை சாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குடியரசு தின அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வார காலம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , " சென்னையில் நடைபெற்ற குடியரசு தினத்தில் விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் 3 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதன்பின்னர் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு சென்று இந்த ஊர்திகள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த அலங்கார ஊர்திகள் சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 20-ஆம் தேதி முதல் காட்சிப்படுத்தப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வார காலத்துக்கு இந்த அலங்கார ஊர்திகள் அவ்விடத்தில் காட்சிப்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com