தமிழ்நாடு
குடியரசு தின கொண்டாட்டம்: மெரினாவில் ஆளுநர் கொடியேற்றுகிறார்..!
குடியரசு தின கொண்டாட்டம்: மெரினாவில் ஆளுநர் கொடியேற்றுகிறார்..!
69ஆவது குடியரசுத் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடி ஏற்றுகிறார்.
காலை 8 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காவல் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். விழாவையொட்டி மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குடியரசுத் தின விழாவையொட்டி, சென்னை முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றி குடியரசு தின விழாவை கொண்டாடுகின்றனர்.