கனிமொழி
கனிமொழிweb

திமுக அரசியலில் அதிரடி திருப்பம்.. 2026 தேர்தலில் களமிறங்கிறாரா கனிமொழி..? எந்த தொகுதி..?

திமுகவில் புதிய திருப்பமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும், துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அதிகமாக பேசப்படுகிறது.
Published on
Summary

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் கனிமொழி போட்டியிடும் வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது. திமுகவில் குடும்ப அரசியல் குறித்த விமர்சனங்கள் உள்ள நிலையில், கனிமொழியின் அரசியல் பயணம் மாநில அரசியலுக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல்களை தீர்க்கும் முயற்சியில் கனிமொழி முக்கிய பங்கு வகித்துள்ளார்.

திமுக மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் பிரதான விமர்சனங்களில் ஒன்று, குடும்ப அரசியல். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அதிகாரங்கள் ஒரே குடும்பத்தில் குவிக்கப்படுவதாக அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு திமுகவின் டெல்லி அரசியலை பிரதானமாக கவனித்து வரும் கனிமொழி, தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு மாநில அரசியில் கவனம் செலுத்த ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Kanimozhi, TR Baalu & CM Stalin
Kanimozhi, TR Baalu & CM Stalin web

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என கனிமொழியின் ஆதரவாளர்கள் வெளிப்படையாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். கனிமொழியின் பிறந்தநாளன்றும் இதனை பிரதானமாக வெளிப்படுத்தினர். அதுமட்டுமல்லாமல், கனிமொழியின் பெயரில் திமுகவில் ஏராளமான விருப்ப மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் நன்கு பரீட்சியமாக இருக்கும் கனிமொழி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும் விருப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி எம்.பியாக இருப்பதால் அந்த மாவட்டத்தில் மக்களிடம் அதிகமாக நேரடியாக தொடர்பில் இருந்து வருவதால், அங்குள்ள ஒரு தொகுதியில் போட்டியிட பரிசீலித்து வருவதாகக் சொல்லப்படுகிறது.

கனிமொழி
தமிழக அரசியலின் நட்சத்திர மாவட்டம்.. திமுக - அதிமுக இடையே கடும் போட்டி.. யார் வசமாகும் தேனி?

சமீபத்தில் திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணியில் இருந்த சிக்கல்களை தீர்ப்பதில் கனிமொழி மிக முக்கிய காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

மாநிலத் தேர்தலில் களமிறங்கினால் நிச்சயம் அமைச்சர் பதவி, அதுவும் அதிகாரமிக்க பதவி என்பது சாத்தியம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அது, குடும்பத்தில் அதிகாரப் போட்டிக்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்கலாம் என்ற பார்வையையும் அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். அதனால், திமுகவில் அரசியல் களம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

எம்பி கனிமொழி
எம்பி கனிமொழிpt desk

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு மார்ச் 18ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது. இந்த நேர்காணலில் கனிமொழி கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்திருக்கிறது.

கனிமொழி
அதிமுக கூட்டணியில் விஜய்? தொடர் முயற்சியில் பாஜக.. மறுக்கும் பழனிசாமி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com