மின்சார கட்டணம் உயர்வு
மின்சார கட்டணம் உயர்வுகூகுள்

தமிழ்நாட்டில் ஜூலை முதல் உயருகிறதா மின் கட்டணம்? 3% உயர்த்த திட்டம் என தகவல்!

தமிழ்நாட்டில் ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த, தமிழ்நாடு மின் வாரியம் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

மின் கட்டணத்தை 3 சதவீதம் உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்திருப்பதாகவும், அதனடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மின் கட்டண உயர்வு
மின் கட்டண உயர்வுமுகநூல்

அதேவேளையில், மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசுதான் முடிவெடிக்க வேண்டுமென கூறியுள்ள மின்வாரிய அதிகாரிகள், அதுதொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதேவேளையில், அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருப்பதால், கட்டண உயர்வு இருக்காது என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com