5 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை தாக்கல்.!

5 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை தாக்கல்.!
5 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை தாக்கல்.!

ஜெயலலிதா மரணம் குறித்து 5 ஆண்டுகள் விசாரணை நடத்தி ஆறுமுகசாமி தனது அறிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து கடந்த 2017 செப்டம்பர் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 5 ஆண்டுகள் தனது விசாரணையை நிறைவு செய்து இன்றைய தினத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 600 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு, 158 பேரிடம் விசாரணை நடத்தி ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்திருக்கிறது. மொத்தமாக ஆணையம் சார்பாக 151 பேரிடமும் மற்றும் தங்களை விசாரிக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்ட 7 பேரிடமும் ஆணையம் விசாரணையை நடத்தியது. இதில் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என அனைவரிடமும் ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.

ஆணையத்தின் அறிக்கை கடந்த 22 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சரின் சுற்றுப்பயணம் காரணமாக இன்று காலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்டு. சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல சட்டத்துறை அமைச்சரிடமும் ஒரு நகல் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com