ஒகேனக்கல் பிரதான அருவியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நிறைவு

ஒகேனக்கல் பிரதான அருவியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நிறைவு
ஒகேனக்கல் பிரதான அருவியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நிறைவு

ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய, பிரதான அருவிக்கு தண்ணீர் செல்வதை மணல் மூட்டை அடுக்கி தடுத்து சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.

கர்நாடகம் மற்றும் கேரளா பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக கடந்த மாதம் காவேரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ள பெருக்கால், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் பிரதான அருவியில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிகள், கம்பி வேலிகள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் இருந்த சுற்றுச் சுவர் அடித்து செல்லப்பட்டது.

தொடர்ந்து கர்நாடக அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்ததையடுத்து, காவேரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. ஆனாலும் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இதனால் இரண்டு மாதமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடித்து வருகிறது. 

இந்நிலையில் ஒகேனக்கல்லில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க மெயின் அருவிக்கு வரும் நீரை தடுத்து, சீரமைப்பு பணியினை தொடங்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, ஆற்றிலிருந்து மெயின் அருவிக்கு தண்ணீர் செல்வதை தடுக்க மணல் மூட்டை அடுக்கும் பணி நேற்று தொடங்கியது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று மணல் மூடை அடுக்கும் பணி நிறைவடைந்து.

தற்பொழுது மெயின் அருவிக்கு நீர் வருவது முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டது. இந்தச் சீரமைப்பு பணிகள் 3 நாட்களில் நிறைவடைந்து. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியாளித்து வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com