மரத்தின் உச்சி போல் தலைமையில் இருந்து கொண்டு வேர்களான தொண்டர்களை நீக்குவதா? - சசிகலா

மரத்தின் உச்சி போல் தலைமையில் இருந்து கொண்டு வேர்களான தொண்டர்களை நீக்குவதா? - சசிகலா

மரத்தின் உச்சி போல் தலைமையில் இருந்து கொண்டு வேர்களான தொண்டர்களை நீக்குவதா? - சசிகலா
Published on

மரத்தின் உச்சி (அதிமுக தலைமை) மேல் உட்கார்ந்து கொண்டு வேர்களாக இருக்கும் தொண்டர்களை கட்சியில் இருந்து நீக்குவது மிகவும் தவறு என்று பழனியை சேர்ந்த தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் பெரியராஜிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், ஒரு மரத்திற்கு வெளியே எப்படி காய், பலம், இலைகள் மட்டும் தெரிவது போல் கட்சி வளர வேர்கள் போல் காரணமாக இருக்கும் கட்சி தொண்டர்களை மரத்தின் உச்சிக்கு மேல் உட்கார்ந்து கொண்டு நீக்குவது மிகவும் தவறு என்று சசிகலா பேசி உள்ளார்.

“எத்தனையோ தொண்டர்கள் தியாகம் செய்துதான் இந்த அதிமுக கட்சி மாபெரும் சக்தியாக இருக்கு. இதுல வந்து தொண்டர்களை அவ்வபோது நீக்கினால் அது எவ்வளவு பெரிய தவறு என்று ஒருகட்டத்தில் அவங்களுக்கு புரியும். இந்த மாதிரி செய்ய செய்யக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். நிச்சையமாக நான் வருவேன். அம்மா எப்படி கட்சியை வழிநடத்தினார்களே அதேபோல் நானும் வழிநடத்துவேன்.

அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும் ஏழை எளிய மக்களுக்கு அம்மா என்ன செய்தார்களே அதை செய்யணும் என்பது என்னுடைய ஆசை. தொண்டர்களின் ஆதரவோடும் மக்களின் ஆதரவோடும் இதை செய்வேன்” என சசிகலா பேசியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com