டாஸ்மாக் கடைகளை அகற்றுங்கள்: ரயில்வே பாதுகாப்பு படை கடிதம்
ரயில் நிலையங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி, டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ரயில்வே பாதுகாப்பு படை கடிதம் எழுதியுள்ளது.
அக்கடிதத்தில், டாஸ்மாக் கடைகள் ரயில் நிலையங்கள் அருகில் இருப்பதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாகவும், மது அருந்திவிட்டு பலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில், 14 ரயில் நிலையங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் அகற்றுவதற்கு ஏற்கனவே 3 முறை கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் ரயில்வே மூத்த கோட்ட பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பழவந்தாங்கல், சைதாப்பேட்டை, வியாசர்பாடி, வில்லிவாக்கம், அம்பத்தூர், அன்னனூர், கும்மிடிப்பூண்டி, ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களிலும், பறக்கும் ரயில் நிலையமான மயிலாப்பூர் மற்றும் பெருங்குடி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடையாளம் காணப்பட்டு அகற்றக் கோரப்பட்டுள்ளதாக ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.