”பி.எப்.ஐ மீதான தடையை நீக்குக! ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்க” - சீமான் ஆவேச பேச்சு!

”பி.எப்.ஐ மீதான தடையை நீக்குக! ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்க” - சீமான் ஆவேச பேச்சு!
”பி.எப்.ஐ மீதான தடையை நீக்குக! ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்க” - சீமான் ஆவேச பேச்சு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்திள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு வள்ளுவர் கோட்டம் அருகே குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது சீமான் மேடையில் உரையாற்றும் போது, ”நான் ஓட்டுக்காக எதையும் செஞ்சது இல்லை, உரிமைக்காக நிற்பவன், ஆனால், தரமற்றவர்கள் கையில் பல ஆண்டுகள் ஆட்சி இருந்து வருகிறது. தமிழக அரசிடம் நிதி இல்லை என கூறுகின்றனர். ஆனால், ரூ.698 கோடி பெண்களுக்கு மாதம் 1000ரூபாய் திட்டம் எதற்கு? ஒரு சிலிண்டர் 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதை கூட வாங்க முடியாது. இப்படிபட்ட ஆட்சியாளர்களை எந்த மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பார்ப்பது?.

இவர்கள் உங்களிடம் சிகிச்சைக்காக வந்தா தயவு செஞ்சி விஷ ஊசி போடுங்க. நாடு நல்லா இருக்கும் என கூறியதோடு, வயித்த வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தா தான் அதன் வலி தெரியும். உயிருக்கு போராடும் போது சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தான் எனக்கு கடவுள். இதனால் சுகாதாரத்துறை அமைச்சர் அண்ணன், தம்பியின் கோரிக்கையாக, மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள், அவர்களை வீதியில் நிற்க வைத்து, நல்லாட்சி வழங்குவதாக பேசாதீர்கள்” என தெரிவித்தவர் தொடர்ந்து...

”காசை கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என அரசியல்வாதிகள் நினைக்கின்றனர். ஆனால், ஒருநாள் மக்கள் காசை தூக்கி மூஞ்சில எரியும் காலம் வரும். தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் பின்னாடி ஒரு கூட்டம் உள்ளது. என் பின்னாடி உலகம் முழுவதும் ஒரு பெரிய கூட்டம் உள்ளது. அதனால், இந்த ஆட்சியாளர்கள் தந்தால் பாருங்க, இல்லைனா நான் வந்து சரி செய்கிறேன். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை குறிப்பிட்டு, உங்கள் மேல் வைத்துள்ள அன்பும் உரிமையும் தெரியும், அதே அன்பும் உரிமையோடு கோரிக்கை வைக்கிறேன்” என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “மிக சொற்பமான கோரிக்கைகளையே மருத்துவர்கள் கேட்கின்றனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலையிட்டு இப்பிரச்னையில் எளிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். ஆசிரிய பெருமக்களை, உயிர்காக்கும் மருத்துவர்களை சாலையில் நிறுத்தி போராட வைக்காதீர்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை நீக்க வேண்டும். அது ஜனநாயக கட்சி. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும். அக்டோபர் 2ல் விசிக நடத்தும் மனிதசங்கிலி பேரணியை ஆதரிக்கிறேன். நானும் பங்கேற்பேன்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com