புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடா? - ஆளுநர் தமிழிசை விளக்கம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடா? - ஆளுநர் தமிழிசை விளக்கம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடா? - ஆளுநர் தமிழிசை விளக்கம்
Published on

புதுச்சேரியில் போதுமான அளவு ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பில் உள்ளது என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் ரெம்டெசிவிர் மருந்தை வெளியில் இருந்து வாங்கி வரச் சொல்வதாகவும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “புதுச்சேரியில் போதுமான அளவு ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பில் உள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு என்ற செய்தியை நானும் பார்த்தேன். உடனே சுகாதாரத்துறை செயலாளரை தொடர்பு கொண்டேன்.

அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். மருந்து தட்டுப்பாட்டால் புதுச்சேரியில் நோயாளிகள் உயிர் போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com