தமிழ்நாடு
கீழ்ப்பாக்கம் மருத்துக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்காக காத்திருக்கும் மக்கள்
கீழ்ப்பாக்கம் மருத்துக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்காக காத்திருக்கும் மக்கள்
ரெம்டெசிவிர் மருந்து வாங்க இன்றும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பொதுமக்கள் அதிகளவில் காத்திருக்கின்றனர். கொரோனா பாதிப்பிற்கு முக்கியமான மருந்தாக சொல்லப்படும் ரெம்டெசிவிர் மருந்தினை வாங்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து வந்து காத்திருந்து மக்கள், தங்கள் மாவட்டங்களிலேயே இந்த மருந்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.