மத நல்லிணக்கம்: இந்து - முஸ்லீம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஆடிப்படையல் திருவிழா

மத நல்லிணக்கம்: இந்து - முஸ்லீம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஆடிப்படையல் திருவிழா
மத நல்லிணக்கம்: இந்து - முஸ்லீம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஆடிப்படையல் திருவிழா

மேலூர் அருகே இந்து, முஸ்லீம் இணைந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சுந்தராஜபுரம், வீராசூடாமணிபட்டி, கச்சிராயன்பட்டி ஆகிய 3 ஊர்களுக்கு உட்பட்ட கிராமத்தினர் அங்குள்ள சின்னகண்மாய் கரையில் அமைந்துள்ள ஐந்துமுளி கோவிலில் ஆடிப்படையல் கொண்டாடுவது வழக்கம்.

இதில், பக்தர்கள் நேத்திக்கடனாக ஆடு, சேவல்களை கொண்டு வந்து கொடுப்பர். அப்படியாக பக்தர்களால் கொண்டு வரப்பட்ட 100 ஆடு 600 சேவல்கள் பலியிடப்பட்டு, அதை மண்பானையில் சமைத்து உண்பது வழக்கம். இதற்காக மண்பானையில் ஆடு மற்றும் சேவல் இறைச்சிகளை மொத்தமாக போட்டு, இதனுடன் வேப்பிலையை சேர்த்து படையல் சமைக்கின்றனர்.

அப்போது மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்துக்களின் திருவிழாவில் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தி பாத்திஹா ஓதி சர்க்கரை கொடுத்தும் ஒற்றுமையுடன் வழிபடுவதை மரபாகக் கொண்டு பலநூறு ஆண்டுகளாக இந்த வழிபாட்டை அப்பகுதி மக்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதில் குறிப்பாக இறைச்சியை வேப்பிலையுடன் சமைக்கும்போது அதன் சுவையை இழக்காமல் தெய்வீக சக்தியால் சுவையாக இருக்குமென கிராமத்தினர் கூறுகின்றனர். பின்னர் மண்பானையிலுருந்து சமைத்து எடுக்கப்பட்ட கறியை பிரித்துக் கொடுத்து உண்ணுகின்றனர். இதில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். மழை வேண்டியும், நோய்நொடியின்றி வாழவும் இந்த ஆடிப்படையல் திருவிழா நடத்தப்படுவதாக கிராமத்தினர் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com