தமிழ்நாடு
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தொழிற் பயிற்சி நிலையங்கள், தட்டச்சு- சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் 50 சதவிகித மாணவர்களுடன் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று பணிபுரிய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் கடைகளில் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அதனதன் நிர்வாகங்கள் உறுதி செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.