மாங்காடு: காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மதியம் இறந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி!

சென்னை மாங்காட்டில் தனியார் மருத்துவமனையில் காலையில் சேர்க்கப்பட்ட நபர், மதியம் உயிரிழந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாங்காடு சம்பவம்
மாங்காடு சம்பவம்புதிய தலைமுறை

சென்னை குன்றத்தூர் அடுத்த சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், சஞ்சனாஸ்ரீ, சர்வேஸ் என்ற குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு குமரன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் குமரன் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். காயம்பட்ட அவரது காலில் இருந்து ரத்தம் வடிந்ததால், இன்று மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

மாங்காடு
மாங்காடுபுதிய தலைமுறை

அங்கிருந்த மருத்துவர்கள் குமரனை மருத்துவமனையில் அனுமதித்து இன்று, சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், குமரனுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் மருத்துவம் பார்த்த நிலையில் மதியம் திடீரென அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

மேலும், மருத்துவர்கள் தவறான சிகிச்சையால்தான் குமரன் இறந்துபோனதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மருத்துவமனை வளாகத்தின் முன்பு அமர்ந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த மாங்காடு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அங்கிருந்து அவர்கள் கிளம்பிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com