புயலில் சிக்கி நாகை மீனவர்கள் 10 பேர் மாயம்: காப்பாற்றக் கோரி கதறும் உறவினர்கள்!

புயலில் சிக்கி நாகை மீனவர்கள் 10 பேர் மாயம்: காப்பாற்றக் கோரி கதறும் உறவினர்கள்!

புயலில் சிக்கி நாகை மீனவர்கள் 10 பேர் மாயம்: காப்பாற்றக் கோரி கதறும் உறவினர்கள்!
Published on

கொச்சி அருகே புயலில் கவிழ்ந்த படகில் சிக்கித் தவிக்கும் 10 நாகை மீனவர்களையும் உடனடியாக காப்பாற்ற உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொச்சி துறைமுகத்திலிருந்து நாகை, சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் தனது விசைப்படகில் உறவினர்கள் 10 பேருடன் கடந்த 29ஆம் தேதி ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றார். டவ்-தே புயல் எச்சரிக்கையை அடுத்து நேற்று கரைதிரும்பும் போது படகு புயலில் சிக்கி மூழ்கியது. மீனவர்கள் 10 பேரும் கடலில் காணாமல் போயினர்.

தகவலறிந்த உறவினர்கள், மீனவர்களை உடனடியாக விமானப்படை விமானங்கள் மூலம் தேடி மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் புயலில் சிக்கி மாயமாகியிருப்பது சாமந்தான்பேட்டை மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com