\
ரேக்ளா பந்தயம் தடுத்து நிறுத்தம்

ரேக்ளா பந்தயம் தடுத்து நிறுத்தம்

ரேக்ளா பந்தயம் தடுத்து நிறுத்தம்
Published on

கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தால் கோவை கொடீசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடக்கி வைத்தார். இதற்கு இடையே ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அவர்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர். அவசர சட்டம் நிரந்தரமாகும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com