சென்னை மெரினாவில் குடியரசு தின விழாவிற்கான ஒத்திகை
குடியரசு தின விழாவிற்கான ஒத்திகை சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்றது.
நாட்டின் 68-வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சென்னை மெரினா கடற்கரையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குடியரசு தினவிழாவிற்கான ஒத்திகை நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. மேடை அமைக்கும் பணி, முப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு போன்றவற்றின் ஒத்திகை இன்று நடைபெற்றது.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் இன்று காலை 7.15 மணிக்கு ஒத்திகை தொடங்கியது. இதனால் கடற்கரை சாலை வழியாக வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மயிலாப்பூர் அண்ணா சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனிடையே குடியரசு தின ஒத்திகை நடைபெறும் இடத்தை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.