\
தென் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
Published on

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிற இடங்களைப் பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பருவம் தவறி கடந்த சில நாட்களாகப் பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களிலும், கடலூர் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள், பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் வேதனை அடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com