அதிமுகவில் விருப்பமனு அளிக்க கொடுக்கப்பட்ட காலஅவகாசம் மார்ச்-3 ஆக குறைப்பு

அதிமுகவில் விருப்பமனு அளிக்க கொடுக்கப்பட்ட காலஅவகாசம் மார்ச்-3 ஆக குறைப்பு

அதிமுகவில் விருப்பமனு அளிக்க கொடுக்கப்பட்ட காலஅவகாசம் மார்ச்-3 ஆக குறைப்பு
Published on

அதிமுகவில் விருப்ப மனு அளிக்க மார்ச் 5 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 3 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணி கட்சியான பாமக விற்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது, அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பமனு பெற்றவர்கள் மார்ச் 3 க்குள் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக விருப்பமனு அளிக்க மார்ச் 5 ஆம் தேதி வரை இருந்த அவகாசம் இருந்த நிலையில் தற்போது அது மார்ச் 3 ஆம் தேதி
வரையாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விருப்ப மனு வாங்கியவர்கள் மார்ச் 3 க்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் மார்ச் 3 ஆம் தேதிக்கு பிறகு காலக்கெடு அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்படாது என அதிமுக சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com