தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு -  தமிழக அரசு

தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு - தமிழக அரசு

தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு - தமிழக அரசு
Published on

தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ 1,200-ல் இருந்து ரூ. 900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் காப்பீடுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை கட்டணம் ரூ.800 இருந்து ரூ.550 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிக்கான கட்டணம் ரூ800 லிருந்து ரூ550 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குழுவாக பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ600 ல் இருந்து 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக சிறிதளவு குறைந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரே நாளில் மீண்டும் அதிகரித்து புதிய உச்சமாக 34,875 ஆக பதிவாகியுள்ளது. 2 வயதுக்கு உட்பட்ட 1,367 சிறார்கள் ஒரே நாளில் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சிகிச்சையில் இருந்தவர்களில் 23,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து 365 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து 5ஆவது நாளாக 300க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியிருக்கின்றன.இணை நோய் இல்லாத 72 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,53,576 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com