வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 70 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கின்றன. அந்தவகையில், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை, ஆயிரத்து 911 ரூபாயிலிருந்து 70 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டு ஆயிரத்து 840 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதேநேரம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் 818 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்ற மார்ச் மாதத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ஆயிரத்து 960 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில் 3 மாதங்களில் 119 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com